Shanu
Matale
பாடசாலை ஆரம்பிக்கும் வேளையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் இவ்வாறு பரவக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.
மாணவர்களின் உடல்நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும், சுவாச நோய்களில் இருந்து பாதுகாக்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவுறுத்தியுள்ளார்.