வத்தேகமையில் கொலை பதற்றம்
Shanu
Matale
கண்டி வத்தேகம நகரில் இன்றைய தினம் பதற்றகரமான நிலை மக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோதல்கள் ஏற்ப்பட்டதினை தொடர்ந்து இது தொடர்பில் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது, கடந்த (3) திகதியன்று மீன்கடை உரிமையாளர் ஒருவரை இனந்தெரியாத ஒரு கும்பல் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவித்த தினத்தன்று இரவு 11 மணியளவில் தனது கடையினை பூட்டிவிட்டு வீடு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பலத்த வெட்டுக்குத்திற்கு இலக்கான அந் நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டபோது , உயிரிழந்த மீன் கடை உரிமையாளரின் நபருக்கும் அதே மீன் சந்தைக்கு அருகில் மற்றுமொரு மீன் கடை உரிமையாளருடன் இதற்கு முன் முரண்ப்பாடு இருந்ததனால் அதனை இலக்கு வைத்து இந்த கொலை நடந்திருக்கலாமென தகவல் வெளியான அதே வேளை சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நேற்று கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டதினை தொடர்ந்து இன்று கொழும்பிலிருந்து மீண்டும் வத்தேகமை நகருக்கு கொண்டு வரும் வேளையிலே பொதுமக்களால் சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் கடைக்கு முன்னால் மோதல் சம்பவங்களும் , பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி கடையினை தாக்கி சேதப்படுத்தினர்.
பின்னர் பொலிஸார் மக்களை கட்டுப்பாட்டற்குள் கொண்டு வந்ததையடுத்து சடலம் உயிரிழந்தவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் நேற்றிரவு சந்தேகநபரின் கடைக்கு தீமூட்டப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகளை 24 மணிநேரமும கடமைக்கு இருத்தியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.