Shanu
சாமி மலை ஓல்டன் கீழ் பிரிவு ஸ்ரீ ஆற்றடி பிள்ளையார் ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான ஐங்கரன் ஐயப்ப யாத்திரை குழுவின் 23 ஆவது வருட
மஹிஷி சம்கார வேட்டை திருவிழா ஆலய பிரதம குரு மற்றும் ஐங்கரன் ஐயப்ப யாத்திரை குழுவின் குருசுவாமி ஸ்ரீ இதயச்சந்திரன் குருக்கள் தலைமையில் நேற்றைய தினம் இடம் பெற்றது.
இதேவேளை சாமிமலை ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் விசேட பூஜைகள் இடம் பெற்று சாமிமலை நகரிலிருந்து குரு சுவாமி மார்கள் ஐயப்ப சுவாமிமார்களின் ஊர்வலம் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஸ்ரீ கணபதி ஓமம், ஐயப்பன் ஹோமம் நடைபெற்று ஸ்ரீ ஆற்றடி பிள்ளையார் பரிவாரம் மூர்த்திகளுக்கு திரவிய அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஹிஷி சம்ஹார வேட்டை திருவிழாவும் இடம் பெற்றது மேலும் ஸ்ரீ சபரிமலை ஐயப்பனுக்கு படி பூஜை இடம் பெற்று குருசாமிகளின் ஆசியை தொடர்ந்து பக்த அடியார்களுக்கு அன்னதான பிரசாதமும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இப் பூஜையை வழிபாடுகளில் சிவ ஸ்ரீ கனகராஜ குருக்கள், திரு பிரதீப் குருசாமி, புவனேஸ்வரன் குருசாமி (தூசி கேட்டரிங் கொழும்பு) மற்றும் ஐயப்ப சுவாமிமார்கள், பக்த அடியார்கள் பலரும் கலந்துகொண்டு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆனந்த் ஐயப்பனின் அருள் ஆட்சியினை பெற்றுக் கொண்டனர். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது