Shanu
Matale
ஹரிஹர சங்கமத்திலிருந்து அவதரித்த ஐயப்ப சுவாமியின் திருக்கோவில் அமைந்துள்ள இடமான சபரிமலைக்கு இன்று கொழும்பு ஸ்ரீ மயூரபதி ஐயப்பன் யாத்திரை குழு சபரி மலை யாத்திரையை இன்று தொடங்கியது.
கடந்த கார்த்திகை மாதம் தொடங்கிய இவ் பக்திமுயற்சியானது கடினமான முறைகளுடன் விரதமிருந்து, ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக் கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து தனது விரத காலத்தினை மேற்கொண்டு தனது பயணத்தினை இன்று மயூரபதி ஐயப்பன் யாத்திரை குழு சுவாமி மார்கள் சபரி மலை யாத்திரையை இன்று தொடங்கியுள்ளனர்.
மேலும் சுவாமி மார்கள் அனைவரும் எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து தனது வேண்டுதல்களையும், ஐயப்பனின் பாதம் வைத்து கரடு முரடனான மலைகளையும் தாண்டி பதினெட்டு படிகளேறி சந்திதானத்தையடைந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய புறப்பட்டுள்ளனர். சுவாமி சரணம்.