Shanu
Matale
அநுராதபுரத்தில் தேசத்திற்கு மகுடம் என்ற திட்டத்திற்கு யானைகள் கூட்டமாக கொண்டு வரப்பட்டதையடுத்து விவசாயிகளின் பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் ஒன்றிணைந்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இன்று (30) காலை 07.00 மணியளவில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் விவசாயிகள், சிறுவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
சில வீடுகள் சுவரொட்டிகளை ஒட்டியும் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட தென்னை மரங்களையும் கொண்டுவந்து மகாவிலச்சிய செல்லும் பிரதான வீதியிலிருந்து தந்திரிமலை செல்லும் பிரதான வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்ததுடன், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டதால், போராட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
தந்திரிமலையின் பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.பிரசன்ன குமார மற்றும் ஓயா மடுவா பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் எச்.ஈ.எம்.யூ.சி.ரத்நாயக்க ஆகியோர் போராட்டம் நடத்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஓயாமடுவ, மஹானிகவெவ, நவோதகம முதலான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.