Breaking NewsHomeஉலகம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

சீனாவின்  திபெத் மாகாணம் இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில்  அமைந்துள்ளது.

இந்நிலையில் திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது

இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . மேலும், 188 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button