அவுஸ்திரேலியாஉலகம்விளையாட்டு
முதல் இன்னிங்கிஸில் 654 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது
முதல் இன்னிங்கிஸில் 654 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டது

Shanu
Matale
இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இன்றைய இரண்டாம் நாளில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும், ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்தவீச்சில் பிரபாத் ஜெயசூரிய மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.