பிரான்ஸ்
Trending

COP28 காலநிலை உச்சி மாநாட்டில் இஸ்ரேலை எச்சரித்த பிரான்ஸ் ஜனாதிபதி

ஹமாஸை மொத்தமாக அழிப்பதே இஸ்ரேலின் இலக்கு என்றால், போர் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

காஸாவில் மீண்டும் வன்முறை வெடிப்பது குறித்து பிரான்ஸ் மிகுந்த கவலை கொண்டுள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

புதிய சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்காக கத்தாருக்குச் செல்வதாகவும் அவர் கூறினார்.

துபாயில் நடைபெற்ற COP28 காலநிலை உச்சி மாநாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்ரோன் இதனைத் தெரிவித்தார்.

நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கான நேரம் இது என்று மக்ரோன் கூறினார்.

மேலும், ஹமாஸுக்கு இஸ்ரேல் தனது நோக்கங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மக்ரோன் கேட்டுக் கொண்டார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் இலக்குகள் மற்றும் அவர்களின் இறுதி இலக்கை இன்னும் துல்லியமாக வரையறுக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றனர்.

ஹமாஸ் அமைப்பு முழுவதுமாக அழிக்கப்படவேண்டும் என்று யாராவது நினைக்கிறார்களா? அப்படியானால், போர் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்’ என்றார்.

பாலஸ்தீனர்களின் உயிரைப் பணயம் வைத்து இஸ்ரேல் தனது பாதுகாப்பை அடையும் பட்சத்தில் அப்பகுதியில் நிரந்தரமான பாதுகாப்பு இருக்காது என்று மக்ரோன் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button