போர் நிறுத்தம் செய்யும் இஸ்ரேல்; ஹமாஸ் சண்டையில் அதிரடி திருப்பம் – உற்று பார்க்கும் உலக நாடுகள்…!!!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்…
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்கிறது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சில மணி நேரங்கள் ஆங்காங்கே போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் போரில் இருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும்.
எங்கள் சண்டை ஹமாஸுக்கு எதிராகத் தான் நடந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை நாங்கள் தடுக்கவில்லை. மேலும், வலுக்கட்டாயமாக பாலஸ்தீனர்களை இடமாற்றம் செய்யவும் நாங்கள் முயலவில்லை என்பதையும் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறோம்.
இப்போது வடக்கு காசா பகுதியில் நாங்கள் ஒரு வலயத்தை உருவாக்கியுள்ளோம். அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளை ரெடி செய்து வருகிறோம். பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவும் அனுமதித்தே வருகிறோம். எங்கள் போரை நாங்கள் இப்படிதான் நடத்தி வருகிறோம்.
காசா இப்போது முழுக்க முழுக்க ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களை விடுவித்து மீண்டும் அங்கே மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே இப்போது நமக்கு நோக்கம்.
இதையெல்லாம் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும். காசாவைக் கைப்பற்ற நாங்கள் முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்கும் திட்டமோ அல்லது அவர்களை வெளியேற்றும் திட்டமோ எங்களுக்கு இல்லை. அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இஸ்ரேல் மீது தேவையற்ற தாக்குதல்கள் நடத்தும் ஆபத்துகளை இது குறைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.