இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது.
அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
குறித்த கூட்டத்தின்போது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான, கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயற்றிறன் ஆகியவை ஆராயப்பட்டன.
இதன்போது கோப் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர், நாட்டில் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்த, சேமிப்புக் கிடங்குகளில் 60,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 45,000 மெட்ரிக் டன் பெற்றோலைப் பராமரித்து வருவதாகக் கூறியுள்ளார்.