உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின்போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க முடியாத பேரழிவு.
1912 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதில் அந்த கப்பல் மூன்று மணி நேரங்களில் முற்றாக மூழ்கியது. அதில் அதில் பயணம் செய்த 1503 பேரும் உயிரிழந்தது உலகின் மிகப் பெரிய கடல் அழிவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கான உணவுப் பட்டியல் 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முதல் வகுப்பு பயணிகள் ஆர்டர் செய்த இந்த உணவு பட்டியலில், மாட்டிறைச்சி, மீன்கள், வாத்து இறைச்சி, சாதம், ஐஸ் கிரீம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.