தமிழ்நாடு
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் சங்கரய்யா.
102 வயது வரை வாழ்ந்த சங்கரய்யா, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமல்லாது உழைக்கும் மக்களுக்காகவும் போராடியவர். பொது உடமை இயக்கத்தை வலுப்படுத்திய சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அரசியல் காரணங்களால் அது கொடுக்க முடியாமலேயே போனது.
இந்த நிலையில் சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.