அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொதுவெளிகளில் பேசும் போது சில நேரங்களில் உளறுவது அவ்வப்போது சர்ச்சையாகி வருகிறது. ஏற்கனவே பல முறை கமலா ஹாரிஸை அதிபர் கமலா ஹாரிஸ் என ஜோ பைடன் அழைத்தது விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. சுமார் 6 முறை அதிபர் ஜோ பைடன் இவ்வாறு உளறியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக ஸ்டான்லி கோப்பையை வென்ற ஹாக்கி அணியான லாஸ் வேகாஸ் கோல்டன் நைட்ஸை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கும் போது பேசிய அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் கமலா ஹாரிஸ் என அழைத்தார். அதோடு அவரது முதற்பெயரையும் தவறாக குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு ஜோ பைடன் மீண்டு போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், இவ்வாறு அவர் தொடர்ச்சியாக உளறி வருவது பேசு பொருளாகியுள்ளது. வரவுள்ள அதிபர் தேர்தலில் அவர் வெல்லுவாராயின் அப்போது அவரது வயது 82-ஆக இருக்கும், அதோடு அவர் அமெரிக்க அதிபர் பதவியை நிறைவு செய்யும் 2028-ஆம் ஆண்டு ஜோ பைடனின் வயது 86-ஆக இருக்கும்.