இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைத்தீவிற்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலைத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது மூயிஸ் வெற்றிபெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலிருந்து நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட மாலைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.
மாலைத்தீவில் முன்னேற்றக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது மூயிஸ்யிடம் தோல்வியடைந்தார்.
இதனால், முகமது மூயிஸ் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானதுடன் இன்று (17) அவர் பதவியேற்கவுள்ளார்.
இதன்படி, மாலைதீவுக் குடியரசின் அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் மாலைத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.