இலங்கையில் நீர் மின் உற்பத்தியானது தற்போது அதிகபட்சமாக மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 96 சதவீதமாக உள்ளது மற்றும் கிட்டத்தட்ட 1200 ஜிகாவாட் மணித்தியாலம் தண்ணீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், அநுராதபுரம் – அங்கம நீர்த்தேக்கத்தில் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 1,300 கன அடி நீர் கொள்ளளவு கலாவெவக்கு திறந்து விடப்பட்டு வருகின்றது.
இதேவேளை, தற்போது இலங்கையில் உள்ள பல நீர்த்தேக்கங்கள் வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானவொரு நிலையில், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் பின்னணியில், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் பெருமளவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள் குவிந்து கிடப்பதால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் ஆறுகளில் இருந்து பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நீண்ட காலமாக நீர்த்தேக்கத்தில் சேர்வதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.