இலங்கையில் ஒரு சில பொருட்களுக்கான பெறுமதி சேர் வரி (VAT) விலக்களிப்பை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட மற்றும் இலகுவாக்கப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) நீக்குவது தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடங்கிய பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது.
அம்பியுலன்ஸ் மற்றும் வைத்திய உபகரணங்களும் VAT வரிக்கு உட்படுத்தப்படுவது ஏன் என அதிகாரிகரிகளிடம் குழு வினவியது.
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தை பரிசீலித்த பின்னர், அரசாங்க நிதி பற்றிய குழுவினால் முன்வைக்கப்பட்ட திருத்தம் நிதி அமைச்சினால் உள்வாங்கப்படும் எனும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், வைத்திய உபகரணங்கள், அம்பியுலன்ஸ், உரங்கள் மற்றும் அதி உயர் புரத விவசாய உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தானியங்களினால் பெற்றுக்கொள்ளும் உணவுகளுக்கு VAT விலக்களிப்பு செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டது.
VAT விலக்களிப்பை நீக்குவது UBER மற்றும் PickME கட்டணங்களில் தாக்கம் செலுத்துவதில்லை என குழு வலியுறுத்தியது.
UBER மற்றும் PickME என்பவற்றுக்கு ஆரம்பத்திலிருந்தே VAT உள்வாங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.