ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை எட்னா வெடித்து சிதறியது; ஆனால் ஒரு நல்ல செய்தி – என்ன தெரியுமா??
பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தகடுகளின் மோதும் போது எரிமலைகள் உருவாகின்றன. எரிமலைகள் எப்போதும் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும் அவை வெடித்துச் சிதறும் போது ஏற்படும் பாதிப்பு பேரழிவாகவே இருக்கும். அதில் இருந்து பாயும் எரிமலை பிழம்பு செல்லும் இடத்தில் எல்லாம் பேரழிவை ஏற்படுத்தும்.
அப்படி ஐரோப்பாவில் மிக ஆக்டிவாக இருக்கும் எரிமலைகளில் ஒன்று எரிமலை எட்னா. அப்போது தொடங்கி இப்போது வரை அங்கே எரிமலை வெடிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த எரிமலை நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் வெடித்துள்ளது. அந்த எரிமலை வெடிப்பு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3,3057 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த எட்னா எரிமலை தான் ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த எட்னா எரிமலை தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இவை மிதமான எரிமலை வெடிப்பாகவே இருக்கிறது. இந்த குறுகிய வெடிப்புகளால் பெரிய பாதிப்பு இல்லை.
என்னதான் இந்த எட்னா எரிமலையால் அங்கே மோசமான இழப்புகள் இருந்தாலும் கூட, அந்த நெருப்பு பிழம்பு அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. இவை அந்த நிலப்பரப்பைச் செழிப்பான ஒன்றாக மாற்றுகிறது. சிசிலி பகுதியில் மிகச்சிறந்த ஒயின்கள் மற்றும் திராட்சைகள் கிடைக்க இதுவே காரணமாகும்.
எரிமலை என்பது வெறும் அழிவுக்கான சின்னம் மட்டமில்லை. அவை சிசிலியின் கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் எட்னாவுக்கு குவிகிறார்கள். அங்கே நாம் காணும் காட்சிகள் என்பது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதாகவே இருக்கிறது. இந்த எரிமலை தான் இப்போது வெடித்துச் சிதறி இருக்கிறது. இது லேசான வெடிப்பு என்பதால் மோசமான பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவை எப்போது வேண்டுமானாலும் பேரழிவை ஏற்படுத்தலாம் என்பதால் அங்குள்ள வல்லுநர்கள் அதைக் கூர்ந்து கவனித்தே வருகிறார்கள்.