நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது அனிமல் படம்.
இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை இயக்கியு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 410 கோடிகளை தாண்டியுள்ளது. வட இந்தியாவில் மட்டும் படத்தின் வசூல் 250 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் ஷாருக்கான், சல்மான்கான் படங்களின் வசூலையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர்தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.
இருந்தபோதிலும் இதுபோன்ற ஒரு கேரக்டர் உண்மையில் இருக்கக்கூடாது என்றும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தக் கேரக்டருக்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.