இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக , சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் , இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியப் பெண்களை பலாத்காரம் செய்தபோதும், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் பெண்கள் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளான நீங்கள் எங்கு சென்றீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், அனைத்து நாட்டு தலைவர்களும், அரசும் இந்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.