கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வருகை தருவதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவிற்குள் வருகை தந்துள்ளனர்.
குடியேறிகளின் வருகையானது வீடுகளுக்கான கேள்வி உயர்வடையும் எனவும் இதனால் நாட்டில் பணவீக்கம் உயர்வடையும் நிலை உருவாகும் எனவும் கனடிய மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் டோனி கிராவில் தெரிவித்துள்ளார்.
குடியேறிகளின் வருகையானது வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குடியேறிகளின் வருகையானது நாட்டுக்கு பல்வேறு நலன்களை கிடைக்கச் செய்யும் என தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொழிற்சந்தையில் குடியேறிகளின் பங்களிப்பு முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.