கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காணாமல் போன குடும்பம் ஒன்றை மீட்புப் படையினர் சடலங்களாக மீட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி முதல் இந்த குடும்பத்தை காணவில்லை என கனடிய போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் நீருக்கு கீழ் மீட்பில் ஈடுபடும் மீட்புக் குழு ஒன்று குறித்த குடும்பத்தின் சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெலி, லோரா தம்பதியினரும் அவர்களது 8 வயதான மகன் டயலானும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
ஆல்பர்ட் கடற்கரையில் இவர்களை இறுதியாக கண்டதாக அவர்களது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். பனிப்பாறையில் வாகனம் மூழ்கியதில் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 25 சென்டிமீட்டர் அளவில் பனி படர்ந்து இருந்தால் மட்டுமே கனரக வாகனங்களை செலுத்த முடியும் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.