கனடாவில் போலி நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விட்ட நபர் ஒருவருக்கு கனடா நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலிய நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விட்டதாகவும், போலி நாணயக் குற்றிகளை வைத்திருந்தர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர் ஒப்புக் கொண்டதாக நியூமார்கட் நீதிமன்றம் 100,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போலி நாணயக் குற்றிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர். கனடாவின் நாணயக் குற்றிகளில் காணப்படும் தனிப்பட்ட சிறம்பம்சங்கள் காரணமாக துரித கதியில் போலி நாணயக் குற்றிகள் அடையாளம் காணப்பட்டு அவை புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் பத்தாயிரம் நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.