சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. JN.1 என்ற வகை கொரோனா வைரஸ் தொற்று, அந்நாட்டில் பரவி வருகிறது. இது பரவும் வேகம் மிகக் குறைவு என்றும், ஆனால் விரைவில் இதன் வேகம் உச்சம் தொடலாம் என்றும் சீன நோய் கட்டுப்பாடு நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த புதிய வகை கொரோனாவால் அந்நாட்டில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா, கடந்த செப்டம்பர் மாதம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்தியையும், உடல்நிலையையும் பொறுத்தே வெளிப்படும் என்றும், மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி JN.1 வகை கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.