உலகம்
Trending

ரஷ்யாவில் தொடர்ந்து குறைந்த பிறப்பு விகிதம் – தடாலடியாக முடிவெடுத்த புடின்…!!

ரஷ்யாவில் தொடர் குறைந்த பிறப்பு விகிதங்கள் காரணமாக, பல ஆண்டுகளாக சுருங்கி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் பெண்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்த புடின் முனைந்துள்ளார்.

ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்தை விளாடிமிர் புடின் தொடங்கிய சில நாட்களில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தி பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விமானப்படையில் சேர பயிலும் பெண்களை பாராட்டிய அவர், ‘நம் விமானப் பள்ளிகளில் ஏற்கனவே போர் விமானங்களில் பெண்கள் பறக்கிறார்கள். அவர்கள் அதை அற்புதமாக செய்கிறார்கள் என்று அமைச்சர் அறிக்கை செய்தார்.

அது முற்றிலும் அது ஆண் தொழில் என்று எப்போதும் தோன்றியது. ஆனால் இன்று எல்லா எல்லைகளும் அழிக்கப்படுகின்றன’ என்றார். ரஷ்யாவில் தொழிலாளர் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதற்கு உக்ரைன் உடனான மோதலும் ஒரு காரணம் ஆகும்.

இதனால் உக்ரைனில் போரிட அழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்களால் அதிகரித்துள்ள பெரிய தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்கவும் புடின் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய புடின், ‘பெண்கள் பணியமர்த்தலில் நிச்சயமாக உடல்நலம், உடற்கூறியல், குடும்பத்துடன் தொடர்புடைய சில வரம்புகள் உள்ளன.

ஒருவேளை நீண்ட வணிகப் பயணம் இருந்தால் குழந்தைகள் யாருடன் தங்குவார்கள்?, ஆனாலும் கூட இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். பெண்களின் வேலைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்’ என தெரிவித்தார்.

இதற்கிடையில், விளாடிமிர் புடின் 2030ஆம் ஆண்டு வரை கிரெம்ளினில் இருக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button