இலங்கையின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி,தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 1 சதவீதமாக இருந்தது.
அதேவேளை ஒக்டோபர் மாதத்தில் -5.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், நவம்பரில் -2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023 ஒக்டோபரில் உணவு அல்லாத பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது, நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.