இலங்கை
Trending

மியன்மார் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி…!!

மியன்மாருக்குள் நுழைந்த 25க்கும் அதிகமான இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு கடத்திசெல்லப்பட்ட இலங்கையர்கள் தற்போது மியான்மாரின் சைபர் கிரைம் பகுதியான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு, இணைய அடிமைகளாக வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இலங்கையர்கள் சுற்றுலா விசா மூலம் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மார் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரின் முயற்சியில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (20) இடம்பெற்றது.

இதில் இலங்கையில் உள்ள மியான்மார் தூதரகத்தின் பிரதிநிதி மற்றும் கடத்தப்பட்டுள்ள ஐந்து பேரின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் ஐடி துறையில் வேலைக்காக மியான்மார் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இணையவழி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட துபாயில் உள்ள இலங்கையர் ஒருவரால் மியான்மாரில் வேலைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர், மியான்மார் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பதும், இவ்வாறு அந்த அமைப்புக்கு மக்களை வழிநடத்துவதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி இலங்கை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பதில் பொலிஸ் மா அதிபரிடம் இன்று மனு ஒன்றை கையளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button