இலங்கைக்கு ஜப்பானின் நிதி அமைச்சர் சுனிச்சி சூசுகீ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கும், கம்போடியாவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சூசுகீ பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கடன் மறுசீரமைப்பு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு மிகவும் அத்தியாவசியமானது என ஜப்பான் நிதி அமைச்சர் சூசுகீ கூறியுள்ளார்.