1,500 ஆண்டுகள் பழமையான பைசண்டைன் விளக்கு – காசாவில் இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்த பொக்கிஷம்…!!
காசா மீதான தாக்குதலின் போது இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் 1,500 ஆண்டுகள் பழமையான பைசண்டைன் விளக்கினை கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை அக்டோபர் 7ம் திகதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை 20,00க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் படைகளை எதிர்த்து காசாவில் சண்டையிட்டு வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பைசண்டைன் விளக்கினை (Byzantine lamp )கண்டுபிடித்துள்ளனர்.
இந்த 1,500 ஆண்டுகள் பழமையான பைசண்டன் விளக்கை இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் 282வது பீரங்கி படையை சேர்ந்த வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விளக்கின் பழமையை உணர்ந்து கொண்ட வீரர்கள் அதனை உடனடியாக நிபுணர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் ஆராய்ச்சியாளர் சாரா தாலிடம் ஒப்படைத்துள்ளனர்.
இஸ்ரேலிய சட்டத்தின் படி, எந்தவொரு நபரும் ஏதேனும் தொல்பொருளை கண்டுபிடித்தால், அதனை 15 நாட்களுக்குள் இஸ்ரேலிய தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.