2024 புத்தாண்டையொட்டி பாகிஸ்தானில் கொண்டாட்டங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பலஸ்தீனர்கள் உயிரிழந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காபந்து பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கர் வியாழக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியில் இதனை அறிவித்தார்.
பாலஸ்தீனியர்களின் துயரத்திலும் துன்பத்திலும் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். எனவே, பாகிஸ்தானில் புத்தாண்டை யாரும் கொண்டாட மாட்டார்கள் என்று கக்கர் கூறினார்.
பாலஸ்தீனர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம் என்று கூறிய கக்கர், பாக்கிஸ்தான் இரண்டு முறை பாலஸ்தீனத்திற்கு உதவிகளை அனுப்பியுள்ளது, மூன்றாவது சரக்குகளை நாங்கள் அனுப்பப் போகிறோம் என்று கூறினார்.
காஸாவில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர்.