டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறப்புகளை குறைப்பதிலும் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் தாய்லாந்தும் முன்னணியில் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டெங்கு இறப்பு வீதம் 1000 நோயாளர்களுக்கு ஆறு பேர் எனவும், ஆசிய பிராந்தியத்தில் டெங்கு இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இறப்புகளை குறைப்பதில் இது மிகவும் நல்லதொரு நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகில் சுமார் 5 மில்லியன் மக்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாகவும் இதன்காரணமாக இது ஆபத்தான நிலை என அடையாளம் கண்டுள்ளதாகவும் வைத்தியர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
டெங்கு நோயைக் குறைக்க பல்நோக்கு அணுகுமுறை தேவை என்றும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வரித்துறை அமைச்சு தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.