2024 இல் என்ன நிகழ்ப்போகின்றது என்பதை பல்கேரியாவில் வாழ்ந்த தீர்க்கதரிசி பாபா வங்கா எழுதிய குறிப்புக்கள் அதிகம் கவனம் பெற்றுள்ளது.
பல்கேரியாவில் பிறந்த பாபா வங்கா சிறு வயதிலே கண்பார்வையை இழந்தவர் என கூறப்படுகின்றது. அதோடு பாபா வாங்கா 1996லேயே இறந்துவிட்டார் எனினும் அவரது கணிப்புக்கள் உலகின் கவனம் பெற்றமைக்கு இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.
உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணித்து உள்ளாராம்.
அந்தவகையில் 2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும்.
இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்றும் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளாராம். சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார் என்றும், அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு செல்லும் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது 2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத “பெரிய நாடு” உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் . அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறும் எனவும் பாபா வங்கா கூறியுள்ளாராம்.
2024 இல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளோம். இதற்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க வேண்டும். கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர்.
புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்குமாம். அதுமட்டுமல்லாது உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும் என்றும் இதே வருடம் மனிதர்கள் ஏலியன்களை காண்பார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.