சினிமா

திருமணமான இரண்டு மாதத்தில் குட் நியூஸ் சொன்ன அமலா பால்: ரசிகர்கள் இன்பதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்த அமலா பால், விஜய், தனுஷ், விக்ரம் என உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால், அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

அதன்பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஏ.எல். விஜய்யுடனான பிரிவிற்கு பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் அமலா பால். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 3 ஆம் திகதி தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அமலா பாலின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் ரசிகர்களுக்கு நல்ல சேதி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அமலா பால். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கணவர் ஜெகத் தேசாய் நெஞ்சில் கர்ப்பமாக இருக்கும் அமலா பால் தெரிவதை போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது. இதனிடையில் அமலா பால் மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் பிரித்விராஜ் மனைவியாக நடித்துள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார் பிளஸ்சி. ப்ரித்விராஜ், அமலா பால், வினீத் ஸ்ரீனிவாசன், லீனா உள்ளிட்டோர் இணைந்துள்ள நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள இப்படத்தினை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button