இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில் பச்சை மிளகாய் கிலோ 2000 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஒரு கிலோ கரட் 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி 2000 ரூபாவை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் , போஞ்சி 500 ரூபாவாகவும், வெண்டைக்காய் 250 ரூபாவாகவும், மிளகாய் 700 ரூபாவாகவும், கோவா 500 ரூபாவாகவும்,போஞ்சி மற்றும் தக்காளி 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, தம்புள்ளை, தம்புத்தேகம, கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கரட் ரூ.1,000, இஞ்சி ரூ.1,900, பச்சை மிளகாய் ரூ.1,800, கறி மிளகாய் ரூ.900, தக்காளி ரூ.900, கத்தரிக்காய் ரூ.800, வெண்டைக்காய் ரூ.560 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.