இலங்கை
Trending

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கியின் கணிப்பு…!!

இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரம் 2023 இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் 2022 – 2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், குறிப்பாக தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button