பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியாவால் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பாடசாலைகளில் காலை கூட்டங்களுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களிடையே நிமோனியா தொற்றும் அதிகரித்துள்ளது. ஜனவரி 31 வரை காலை கூட்டங்களுக்குத் தடை விதிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார அறிவுறுத்தலை பெற்றோர்கள் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெதுவெதுப்பான ஆடைகள் அணிய வேண்டும் எனவும் முதலமைச்சர் நக்வி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.