இலங்கை
Trending

இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்…!!

நாட்டில் வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கார் கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.

வாகனம் கொள்வனவு செய்யும் பலர் திறந்த காகித வாகன பரிமாற்றங்களைச் செய்யவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் நிஷாந்த அனுருத்த கூறியுள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை இனங்கண்டு அபராதம் விதிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமரா கட்டமைப்பு மூலம் இன்று முதல் பெருந்தொகையானோர் அடையாளம் காணப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில வாகனங்களின் உண்மையான பதிவு உரிமையாளரை பலரது திறந்த காகித மூலம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வேறு ஒருவரிடமிருந்து வாகனம் வாங்கினால் அதை உடனடியாக அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button