Homeஇலங்கை

இலங்கை உணவுகளை உலகறியச் செய்த சவிந்திரி

“மாஸ்டர் செஃப்” அவுஸ்திரேலியா 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த சவிந்திரி பெரேரா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அவர் போட்டி முழுவதும் இலங்கை உணவுகளை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வெற்றியின் பின்னர் சவிந்திரிபெரேரா நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார்.

இலங்கையில் பிறந்த சவிந்திரி பெரேரா, தனது 18வது வயதில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தார்.

தற்போது 30 வயதாகும் அவர், தொழில் ரீதியாக வங்கி ஆலோசகராக உள்ளார்.

சிறுவயது முதலே இலங்கை உணவு தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா போட்டியில் சாவிந்திரி கலந்து கொண்டார்.

அந்த போட்டியில், அவர் தனது தாயார் தயாரித்த சுவையான இலங்கை உணவு மற்றும் பானங்களை தயார் செய்திருந்தார்.

சிறப்பு என்னவென்றால், அவர் தயாரிக்கும் உணவில் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை போன்ற உள்ளூர் மசாலாக்களை மிக துள்ளியமாக சேர்ந்திருந்தமை ஆகும்.

அவுஸ்திரேலியன் நெட்வொர்க் – 10 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “MasterChef” அஸ்திரேலியா ரியாலிட்டி சமையல் போட்டிக்காக, அஸ்திரேலியா முழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் சோதனைச் சுற்றுகளில் பங்கேற்கின்றனர்.

நடுவர் குழு அவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையின் அடிப்படையில் 50 பேரை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்தனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய குடியிருப்பாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் தொழில்முறை சமையல் கலைஞர்கள் “MasterChef” போட்டியில் பங்கேற்க முடியாது என்பது சிறப்பம்சமாகும்.

அரையிறுதிச் சுற்றில் 50 போட்டியாளர்களில், 24 போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

பிறகு ரியாலிட்டி டிவி ஷோவில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது உணவு வகைகளை சமைத்தனர்.

அவர்களில், இறுதி மூவரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சவிந்திரி பெரேரா, MasterChef Australia 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

அந்த வெற்றிக்குப் பிறகு, நேற்று இரவு அவர் நாடு திரும்பினார்.

அவரை வரவேற்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button