Homeஇலங்கை

கோர விபத்தில் சிக்கிய மருத்துவர் உயிரிழப்பு

கோர விபத்தில் சிக்கிய மருத்துவர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த,   நாத்தன்டியா துங்கன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய செபாலிகா வனமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 04 ஆம் திகதி காலை சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே – கலஹிட்டியாவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

தேவாலா சந்தியில் இருந்து சிலாபம் திசை நோக்கிச் பயணித்த பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புத்தளம் திசை நோக்கிச் சென்ற சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 27 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பொறியியலாளரான தனது கணவருடன் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக தேவாலா சந்தி வரை பயணிப்பதற்காக குறித்த  மருத்துவர் வென்னப்புவ பகுதியில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.

பின்னர் கணவர் பேருந்தில் இருந்து இறங்கி நாத்தாண்டிய துங்கன்னாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

மருத்துவர் அதே பேருந்தில் சிலாபம் பொது மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போதே துரதிஷ்டவசமாக விபத்துக்குள்ளானார்.

படுகாயமடைந்த மருத்துவர், அவர் சிகிச்சைக்காக பணிபுரிந்த சிலாபம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களில் இருந்த அவரது நண்பியை காப்பாற்ற சக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

வாழ்வுக்கு சாவுக்கும் இடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர் நேற்று (15) உயிரிழந்துள்ளார்.

இந்த மருத்துவர் குளியாபிட்டிய பொது வைத்தியசாலையிலும் பின்னர் புத்தளம் ஆதார வைத்தியசாலையிலும் ஏறக்குறைய 4 வருடங்கள் கடமையாற்றி சிலாபம் பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நிலையில் இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button