ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இன்று (22) இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை அணி, மலேசிய மகளிர் அணியை 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களைப் பெற்றது.
185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மலேசிய மகளிர் அணி 19 ஓவர்கள் 5 பந்துகள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 40 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கலாகவே சமரி அத்தபத்து 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆசிய கிண்ண மகளிர் டி20 போட்டியில் பெறப்பட்ட முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.