இலங்கை கிரிக்கட்டுக்கான புதிய யாப்பை சட்டமாக்க அரசாங்கம் தீர்மானம்
இலங்கை கிரிக்கட்டுக்கான புதிய யாப்பை சட்டமாக்க அரசாங்கம்
இலங்கை கிரிக்கட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கட்டுக்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த குழுவால் இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உத்தேச இலங்கை கிரிக்கட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.