சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய காலை மு.ப. 10.00 – பி.ப. 5.00 வரை பின்வரும் விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது.
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii) கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் இரு கீழ் கட்டளைகள்
(iv) இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழ் விதிகள்
மேலும், பி.ப. 5.00 – பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளது.