பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 67.500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.