இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவேகம பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 8 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் வலவிவேகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவரின் சடலம் இருந்த இடத்தில் இரத்தம் கசிந்திருந்ததை அவதானித்துள்ளதுடன் இந்த மரணம் கொலை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வேறு ஒருவருடன் மது அருந்தியுள்ளதாகவும், அங்கு இடம்பெற்ற சம்பவத்திலேயே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.