Homeஇலங்கை

கவனயீனத்தால் பறிபோன இளைஞனின் உயிர்!

கவனயீனத்தால் பறிபோன இளைஞனின் உயிர்!

சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அவருக்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தினுகவை அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை எனவும் ஆவணங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் அவரும் அமெரிக்கா செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பசிந்து தேத்மிக பெர்னாண்டோ 20 வயதுடைய இளைஞர், விபத்தில் படுகாயமடைந்து தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வட்டக்கல்லிய ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு செயற்படாததால் ரயில் சமிக்ஞை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஒரு வாரத்திற்கு முன்னர் அதனை சரி செய்துள்ள போதும், சிவப்பு ஔி சமிக்ஞை மாத்திரம் 24 மணித்தியாலமும் ஔிர்ந்துக் கொண்டிருந்ததாக  அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதிய போது, ரயில் கடவையில் முதியவர் ஒருவர் கடமையில் இருந்ததாகவும், ரயில் வருதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் ரயில் கடவையின் இரு பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதனை அவதானிக்காது வந்த மோட்டார் சைக்கிள் ரயில் வீதியில் வந்த வேகத்தில் நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று (10) சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button