Breaking Newsஇலங்கை
கோர விபத்து - சாரதியின் கவனயீனம் - 5 வயது சிறுவன் உயிரிழப்பு
கோர விபத்து - சாரதியின் கவனயீனம் - 5 வயது சிறுவன் உயிரிழப்பு
Shanu
Matale
ஹட்டன்(Hatton) – மல்லியப்பு பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் ௭ பெண் ஒருவரும்) மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், பேருந்தில் சுமார் 54 பயணிகள் வரை பயணித்த நிலையில், 40 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.