Shanu
Matale
நேற்று (21) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்திருந்த காணியில் இருந்த காவலாளி ஒருவரே இக்கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் கொலையை செய்துவிட்டு இறந்தவரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்