Shanu
Matale
மாத்தளை மறைமாவட்டத்தின் பிரசித்திபெற்ற தொன்மை வாய்ந்த ஹுண்ணஸ்கிரிய புனித அன்னை வேளாங்கன்னி ஆலய மறைக்கல்வி மாணவர்களின் இவ்வாண்டிற்கான ஒளி விழா நிகழ்வானது பங்குத்தந்தை அருட்பணி. கொல்வின் அடிகளார் தலைமையில் நேற்றைய தினம் 21.12.2024 ஆலய வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வின் விசேட அதிதியாக பங்குத்தந்தை அருட்பணி. கொல்வின் அடிகளார் மற்றும் அருட்சகோதரர்.அனிஸ்டன் அவர்களும் ஆரம்பித்து வைத்தனர். இதனை சிறப்பிக்கும் விதமாக மறைக்கல்வி மாணவர்களின் நடனம், பாலன் பிறப்பை சித்தரிக்கும் நாடகம், மற்றும் கரோல் கீதம் பாடுதல் என்பன இடம்பெற்றிருந்தது.
மறையாசிரியர்களினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒளிவிழாவில் மாணவர்களின் திறமையினை பாராட்டும் வண்ணம் பங்குத்தந்தையினால் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், ஆலய மேற்புப் பணிச்சபை உறுப்பினர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட ஊர்மக்கள் அடங்கலாக பெருமளவானோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.