Homeஇலங்கை

லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

Shanu

Matale

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (30) நியமிக்கப்பட்டிருந்தனர்

இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் நேற்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button