2025! முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடும் நகரங்கள்
2025! முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடும் நகரங்கள்
Shanu
Matale
உலக அளவில் பல்வேறு மாற்றங்களை தந்து விட்டு 2024 புறப்பட்டு விட்டது. 2025 தற்போது பிறந்து இருக்கிறது. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் கிழக்கு பசிபிக் நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதை அடுத்து அந்த நாடுகளில் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள், சோகங்கள், அரசியல் மாற்றங்கள், சினிமா நிகழ்வுகள், அரசியல் வருகை, பிரபலங்களின் மரணங்கள் என இந்த ஆண்டு உள்ளூர் தொடங்கி உலக அளவில் பல மாற்றங்கள் அரங்கேறி இருக்கிறது.
இந்த நிலையில் உலகில் முதல் நாடாக டோங்கா சமோவாவும், அடுத்ததாக கிரிபாட்டியும், அடுத்ததாக நியூஸிலாந்தும் புத்தாண்டை வரவேற்றுள்ளன.