Breaking NewsHomeஇலங்கை

கருப்பு வேன் பாடசாலை மாணவி கடத்தல்

கருப்பு வேன் பாடசாலை மாணவி கடத்தல்

Shanu

Matale

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சி.சி.டி.வி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அச்சமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட மாணவி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், கடத்தல் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button